« »

பொதுவுடைமை (Communism)

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

அங்கும் இங்குமாய்,
எங்கு நோக்கினும்;
இலவச கைபேசி,
இலவச அரிசி.

ஆம்!
தேர்தல் தேதி,
நெருங்கும் அறிகுறி!

இல்லாப் பொருளை,
இலவசமாய் எமக்களித்து;
வாக்கினைத் திரட்டும்,
வேடிக்கை வேட்பாளர்களே!

இந்நாட்டில் இல்லாப்
பொதுவுடைமையை,
இலவசமாய் எமக்களிக்க,
எவரேனும் உண்டோ?

உம்மிடம் உள்ள
எண்ணற்ற செல்வத்தை,
வெளிநாட்டு வங்கிகளில்,
பண்பற்றுப் பதுக்காதீர்!

வறுமைத் தீ அணைய,
வேலையின்மை நீங்க,
கல்வித்தரம் உயர,
சாதிக்கொடுமை ஒழிய,
இப்பாரதத்தில் வேண்டும்
‘பொதுவுடைமை’!!!

2 Comments

  1. kalyani krishnan says:

    Kudos to you Aarthika. Nice imagination. But one small correction. It is not கல்வித்தாரம்…கல்வித்தரம்.

Leave a Reply